ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுண்டவுன் தொடங்கியது!
Monday, December 11 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுண்டவுன் தொடங்கியது!

Web Desk by Web Desk
Sep 1, 2023, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் 24 மணிநேர கவுண்டவுன்  தொடங்கியுள்ளது

இஸ்ரோவின் சந்திரயான் -3யின் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் 24 மணிநேர கவுண்டவுன் இன்று காலை தொடங்கியது.

பூமியில் இருந்து  3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்  நிலவுக்கு 40 நாட்களில் கடந்து சென்ற சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் இறங்கி, வெற்றிகரமாக ஆய்வுப்  பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை பற்றிய ஆய்வை, இதுவரை அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி ஆகிய நாடுகளே மேற்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது இந்தியா சேர்ந்துள்ளது.

சூரியனின் வெளிப்புற வெப்பச் சூழல், கதிர் வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை செய்வதற்காக ,ரூ.423 கோடி செலவில் இஸ்ரோ உருவாக்கியுள்ள, சுமார் 400 கிலோ எடை கொண்ட ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-57 ஏவுகணை  மூலம் நாளை பகல் 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

விண்ணில் பாயும் ஆதித்யா எல்-1 விண்கலம் முதலில் பூமிக்கு வெளியே புவி வட்டப்பாதையில் கொண்டுசென்று நிலை நிறுத்தப்பட இருக்கிறது. அதன்பிறகு, நீள்வட்டப்பாதையில் பூமியை சுற்றிவரும் ஆதித்யா எல்-1 விண்கலம், அதன்பிறகு சூரியன் நோக்கி நகர்த்தி செல்லப்படும்.

பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லெக்ரேஞ்சியன் புள்ளி 1’ என்பது தான் அதன் இலக்கு. அந்த இடத்தில்தான் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசை நிலையாக இருக்கும்.

இந்த ஆதித்யா எல்-1 விண்கலம், 127 நாட்களில் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு ‘லெக்ரேஞ்சியன் 1’ புள்ளியில் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. அங்கு இருந்தபடிதான், சூரியன் பற்றிய ஆய்வுப்பணியை ஆதித்யா எல்-1 தொடங்க இருக்கிறது.

சூரியனில் இருந்து 14 கோடியே 85 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி இருந்தாலும், ஆதித்யா எல்-1-ல் இருக்கும் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் சூரியனை அருகில் இருந்து பார்ப்பதுபோன்ற அற்புத காட்சியை வெளிப்படுத்தும்.

விண்கலத்தில் உள்ள 7 அதிநவீன கருவிகள், சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர், வெளிப்புற அடுக்கு உள்ளிட்டவைகளை துல்லியமாக ஆய்வு செய்யும்.

5 ஆண்டுகள் ஆயுட்காலமுடைய  ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனைப் பற்றிப் பல புதிய கண்டுப்பிடிப்புக்களை வெளியே கொண்டுவரும் என்று உலகமே எதிர்பார்த்து இருக்கிறது.

Tags: isrosunmissionaadhithya-L1ISRO
ShareTweetSendShare
Previous Post

தி.மு.க. எம்.பி. மீதான வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

Next Post

ஐந்து மொழிகளிலும்  ஆச்சரியப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்!

Related News

சூரியனை படம்பிடித்த ஆதித்யா எல்-1 !

சூரியனை படம்பிடித்த ஆதித்யா எல்-1 !

இஸ்ரோவின் 10 புதிய திட்டங்கள் என்ன?

இஸ்ரோவின் 10 புதிய திட்டங்கள் என்ன?

ககன்யான் திட்டத்துக்கு விண்வெளி வீரர்கள் தயார்: இஸ்ரோ தலைவர்!

ககன்யான் திட்டத்துக்கு விண்வெளி வீரர்கள் தயார்: இஸ்ரோ தலைவர்!

ஆதித்யா- எல் 1 விண்கலம் ஆய்வுப்பணியை தொடங்கியுள்ளது !

ஆதித்யா- எல் 1 விண்கலம் ஆய்வுப்பணியை தொடங்கியுள்ளது !

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது!

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது!

Load More

அண்மைச் செய்திகள்

சரணடைவதுதான் ஒரே வழி: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

சரணடைவதுதான் ஒரே வழி: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

எங்களது இலக்கு 400 சீட்… காங்கிரஸ் இலக்கு ரூ.400 கோடி ஊழல்: மத்திய அமைச்சர் கிண்டல்!

எங்களது இலக்கு 400 சீட்… காங்கிரஸ் இலக்கு ரூ.400 கோடி ஊழல்: மத்திய அமைச்சர் கிண்டல்!

சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பின் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சியின் புதிய விடியலைக் கண்டுள்ளன!

சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பின் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சியின் புதிய விடியலைக் கண்டுள்ளன!

பொது மக்களை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ – வெளிவராத பரபரப்பு தகவல்!

பொது மக்களை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ – வெளிவராத பரபரப்பு தகவல்!

யாருக்கெல்லாம் கிடைக்கும் நிவாரணத் தொகை ரூ.6000?

யாருக்கெல்லாம் கிடைக்கும் நிவாரணத் தொகை ரூ.6000?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்பதை நிரூபித்துள்ளது! – அமித் ஷா!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்பதை நிரூபித்துள்ளது! – அமித் ஷா!

எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது – யார் இவர்?

எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாகித்ய அகாடமி விருது – யார் இவர்?

மிக்ஜாம் புயல்: சக்தி மசாலா ரூ.1 கோடி நன்கொடை!

மிக்ஜாம் புயல்: சக்தி மசாலா ரூ.1 கோடி நன்கொடை!

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies