இரஷ்யா, வடகொரியா இராணுவப் பேச்சுவார்த்தை
Monday, December 11 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரஷ்யா, வடகொரியா இராணுவப் பேச்சுவார்த்தை

Web Desk by Web Desk
Aug 31, 2023, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரஷ்யாவும் வட கொரியாவும் , பீரங்கி உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களுக்கு வெடிமருந்துகளை வழங்கும் ஆயுத ஒப்பந்தம் பற்றிய தங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த உளவுத்துறை, பீரங்கி உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களுக்கு வெடிமருந்துகளை வழங்கும் ஆயுத ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகளை இரஷ்யாவும் வட கொரியாவும் முன்னெடுத்து வருகின்றன என்று தெரிவித்துள்ளது. எனினும், இதனை வட கொரியா மறுத்திருக்கிறது. அதேசமயம், கடந்த மாதம் இரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு வட கொரியாவுக்குப் பயணம் செய்ததைத் தொடர்ந்து, இரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் குழு பியோங் யாங்கிற்கு பயணம் செய்ததாக இரஷ்யா தெரிவித்துள்ளது.

தற்போது பயணம் செய்துள்ள 2-வது குழுவைத் தவிர, இரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னும், இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதாக உறுதியளித்து கடிதங்களைப் பரிமாறிக்கொண்டதாகத் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் மூலோபாய தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபற்றி ஜான் கிர்பி கூறுகையில், “உக்ரைனில் உள்ள இரஷ்ய இராணுவப் படைகளுக்கு ஆதரவை வழங்குவது குறித்து வட கொரியா தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. மேலும், இரஷ்யாவிற்கும் வட கொரியாவுக்கும் இடையேயான ஆயுதப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன. இது தொடர்பான இந்த பேச்சுவார்த்தைகள் உயர்மட்ட ஆலோசனை இனிவரும் மாதங்களில் தொடரலாம்.

மேற்கத்தியப் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக இரஷ்யாவின் முயற்சிகளையும் அதன் போருக்கான ஆதார ஆயுதங்களையும் தொடர்ந்து விளம்பரப்படுத்த இரஷ்யாவின் புதின் நிர்வாகம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம். இந்த சாத்தியமான ஒப்பந்தங்களின் கீழ், இரஷ்யா வட கொரியாவிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு மற்றும் பல வகையான வெடிமருந்துகளைப் பெறும். இதை இரஷ்ய இராணுவம் உக்ரைன் மீது பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்களில் இரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை தளத்திற்கு உதவும் மூலப்பொருட்களை வட கொரியா வழங்குவதும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் மீது அமெரிக்கா நேரடி நடவடிக்கை எடுக்கும் மற்றும் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வட கொரியா நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட், புதன்கிழமை நடந்த பாதுகாப்பு கவுன்சிலின்போது இரஷ்யாவும் வட கொரியாவும் ஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்

`

Tags: russianorth korea
ShareTweetSendShare
Previous Post

இலங்கை vs வங்காளதேசம் யார் வெல்வார் ?

Next Post

நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Related News

மேடையிலேயே கதறி அழுத வடகொரிய அதிபர்: காரணம் இதுதான்!

மேடையிலேயே கதறி அழுத வடகொரிய அதிபர்: காரணம் இதுதான்!

டிசம்பர் 19-ம் தேதி 15-வது இந்தியா – ரஷ்யா வணிக உரையாடல்!

டிசம்பர் 19-ம் தேதி 15-வது இந்தியா – ரஷ்யா வணிக உரையாடல்!

இரஷ்ய-உக்ரைன் போர்: புடின் அதிரடி நடவடிக்கை

இரஷ்ய-உக்ரைன் போர்: புடின் அதிரடி நடவடிக்கை

8-க்கும் அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் : ரஷ்ய அதிபர் புடின்

8-க்கும் அதிகமான குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் : ரஷ்ய அதிபர் புடின்

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்!

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: ரஷ்யா திடீர் சோதனை!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: ரஷ்யா திடீர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை போக்குவரத்தில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

சபரிமலை போக்குவரத்தில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

பிறந்த நாளில் இறந்து போன பெண் – என்ன காரணம்?

பிறந்த நாளில் இறந்து போன பெண் – என்ன காரணம்?

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.950 கோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.950 கோடி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

தூதரகங்களுக்கு மெமோ அனுப்பிய விவகாரம் : இந்தியா மறுப்பு

தூதரகங்களுக்கு மெமோ அனுப்பிய விவகாரம் : இந்தியா மறுப்பு

மக்களவைத் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையம் தீவிரம்!

மக்களவைத் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையம் தீவிரம்!

காங்கிரஸ் எம்.பி. ஊழல்: நாடாளுமன்றம் முன்பு பா.ஜ.க. போராட்டம்!

காங்கிரஸ் எம்.பி. ஊழல்: நாடாளுமன்றம் முன்பு பா.ஜ.க. போராட்டம்!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது! – ஜெய்சங்கர்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது! – ஜெய்சங்கர்

இந்தியாவில் 55 தளங்களில் செயல்படும் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்! – வி.கே.சிங்

இந்தியாவில் 55 தளங்களில் செயல்படும் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்! – வி.கே.சிங்

ஜார்க்கண்ட் முதல்வருக்கு 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

ஜார்க்கண்ட் முதல்வருக்கு 6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாராட்டுக்குரியது! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாராட்டுக்குரியது! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies