அமிர்த காலத்தில் இந்தியா வளர்ந்த நாடாகி விடும் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Sunday, December 10 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமிர்த காலத்தில் இந்தியா வளர்ந்த நாடாகி விடும் – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Web Desk by Web Desk
Aug 18, 2023, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமிர்த காலமான 2047ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடகி விடும் அதற்குப் பிரதமர் மோடி கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டமும் காரணமாக இருக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாள் பயணமாகப் புதன்கிழமை இரவு ஒடிசாவிற்குச் சென்றார். பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இன்று ரகுராஜ்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,

“சுதந்திர தினப் பெருவிழாவில் பிரதமர் மோடி விஸ்வகர்மா திட்டம் பற்றிப் பேசி இருந்தார். பாரம்பரியக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்த  இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கி உள்ளோம். விஸ்வகர்மா திட்டம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் இந்த சூழ்நிலையில் இதனைப் பற்றிப் பேச வேண்டும். அதுவும் வண்ணக் கலைஞர்கள் நிறைந்த ரகுராஜ்பூரில் பேசியே ஆக வேண்டும். அடுத்த மாதம் வரவுள்ள விஸ்வகர்மா தினத்திலிருந்து (செப்டம்பர் 17) இந்தத் திட்டம் அமலுக்கு வரவுள்ளது. இந்தியா 2047ம் ஆண்டு வளர்ந்த நாடாக மாறும் சூழலில், இந்தியாவின் வளர்ச்சிக்கு விஸ்வகர்மா  திட்டமும் பெரும் பங்காற்றியிருக்கும்.

தனது நுண்ணறிவு மூலம் கற்சிலைகளை வடிப்பவர்களாக இருக்கலாம், ஓவியங்களை வரைபவர்களாக இருக்கலாம், பனை ஓலைகளைக் கொண்டு அழகழகான பொருட்களை உருவாக்குபவர்களாக இருக்கலாம். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே, பிரதமர் மோடியின் நோக்கம். நமது நாட்டின் மென்திறன் (soft skills) இத்தகைய கைவினைக் கலைஞர்களிடம் இருக்கிறது.

தச்சு வேலை, படகு தயாரிப்பு, இரும்புக் கொல்லர், ஆயுதங்கள் தயாரிப்பு, சுத்தியல் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு, பூட்டுத் தயாரிப்பு, பொற்கொல்லர், மண்பாண்டக் கலைஞர், சிற்பி, கல் உடைப்பவர், காலணி தைக்கும் கலைஞர், கொத்தனார், கூடை – பாய் – துடைப்பம் – தேங்காய் நார் மூலம் கால் மிதியடி தயாரிப்போர், பொம்மை கலைஞர்கள், முடிதிருத்துவோர், பூ மாலை தயாரிப்பவர், சலவை தொழிலாளர், தையல் கலைஞர், மீன்பிடி வலை தயாரித்தல் ஆகிய 18 வகையான தொழில்கள் இந்தத் திட்டத்தில் அடங்கும். இந்த தொழிலாளர்கள் அனைவருமே பாரம்பரியமாகவோ அல்லது குரு-சிஷ்ய முறைப்படியோ ஏதேனும் வகையில் கற்றவர்களாகவே இருக்க முடியும். அவர்களுக்கு முறையான சான்றிதழ் கூட இருக்காது. அதனால் இந்தத் திட்டத்தின் கீழ்ப் பதிவு செய்வோர்க்குச் சான்றிதழுடன் கூடிய அடையாள அட்டைக் கொடுக்கப்படும் . மேலும் அவர்களுக்குத் தொழில் செய்ய 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அரசுக் கடன் உதவி,  5 சதவீத வட்டியில் வழங்கப்படும்.

இதனால் அவர்களுக்குச் சிறந்த திறனுடன் கூடிய தொழில் வளர்ச்சி ஏற்படும்.  ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த விஸ்வகர்மா திட்டம் கைவினைக் கலைஞர்களுக்கு மிகப் பெரிய நன்மையானதாக இருக்கிறது ”  எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர், மணல் கலைஞர் சுதர்சன பட்நாயக்கின் மேரி மாதா மேரி தேஷ் கலை சிற்பத்தைப் பார்வையிட்டார். சுதந்திரப் போராட்ட வீரர் சஹீத் ஜெய் ராஜ்குருவின் பிறந்த இடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச அலை சறுக்குப் போட்டி: மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்.

Next Post

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவை இங்கிலாந்து சுகாதார செயலர் சந்தித்தார்.

Related News

இரயில்வே கேட் அமைக்க நிர்மலா சீதாராமன் ரயில்வே அமைச்சரிடம் நிதியமைச்சர்  வேண்டுகோள்!

இரயில்வே கேட் அமைக்க நிர்மலா சீதாராமன் ரயில்வே அமைச்சரிடம் நிதியமைச்சர்  வேண்டுகோள்!

கேசிஆர் ஆட்சியில் கடனில் தத்தளிக்கும் தெலுங்கானா!

கேசிஆர் ஆட்சியில் கடனில் தத்தளிக்கும் தெலுங்கானா!

வெற்றி தோல்வி இயற்கையானது : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

வெற்றி தோல்வி இயற்கையானது : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பரியம்!

நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பரியம்!

கோவில் சொத்துக்கள் திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை!

கோவில் சொத்துக்கள் திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை!

மத்திய பிரதேச மக்களின் ஆதரவை பாஜக பெறும் : நிர்மலா சீதாராமன்!

மத்திய பிரதேச மக்களின் ஆதரவை பாஜக பெறும் : நிர்மலா சீதாராமன்!

Load More

அண்மைச் செய்திகள்

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டம்!

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

மேட்டூர் அணை: நீர்மட்டம் 68.53 அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணை: நீர்மட்டம் 68.53 அடியாக அதிகரிப்பு!

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!

தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies