மணிப்பூர் விவகாரம்: 3 நீதிபதிகள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைப்பு!
Monday, December 11 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் விவகாரம்: 3 நீதிபதிகள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைப்பு!

Web Desk by Web Desk
Aug 8, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை கண்காணிக்க 3 பெண் நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக குக்கி சமூகத்தினருக்கும்,  மெயிட்டி சமூகத்தினருக்கும் இடையே கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வன்முறைகள் நடந்து வருகிறது. இதனிடையே  பழங்குடியின பெண்கள் மீதான வன்முறை காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. உச்சநீதிமன்ற விசாரணைக்கு மணிப்பூர் மாநில டி.ஜி.பி. ராஜிவ் சிங் நேரில் ஆஜரானார். அப்போது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, மணிப்பூர் விவகாரத்தை மிகவும் கவனமுடன் கையாண்டு வருவதாகவும், இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “மணிப்பூர் விவகாரத்தில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஆகவே, மேற்கண்ட விவகாரம் தொடர்பான ஒட்டுமொத்த விசாரணையையும் கண்காணிக்க ஓய்வுபெற்ற 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கும்” என்று உத்தரவிட்டனர்.

அதன்படி, காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல், மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஷாலினி ஜோஷி, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

Tags: 3 retired judgesmanipur issuesupreme courtjustice asha menonjustice shalini joshijustice gita mittal
ShareTweetSendShare
Previous Post

இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ஒரு புரட்சி – ஜிசாட் -24

Next Post

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தொடர் முழுவதும் இடைநீக்கம்!

Related News

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற அண்ணாமலை!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்! – பிரதமர் மோடி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்! – பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது செல்லும்: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது செல்லும்: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: இன்று தீர்ப்பு!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: இன்று தீர்ப்பு!

இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா்: தகவல் கோரும் உச்ச நீதிமன்றம்!

இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா்: தகவல் கோரும் உச்ச நீதிமன்றம்!

370 ரத்து விவகாரம்: டிசம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

370 ரத்து விவகாரம்: டிசம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மிக்ஜாம் புயல்: சக்தி மசாலா ரூ.1 கோடி நன்கொடை!

மிக்ஜாம் புயல்: சக்தி மசாலா ரூ.1 கோடி நன்கொடை!

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

புதிய சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம்! – பிரதமர் மோடி

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

ஒரே ரெய்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 300 கோடி பணம் பறிமுதல்!

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

வால்பாறையில் தொடரும் புலிகள் நடமாட்டம்!

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

செங்கல்பட்டு சரக்கு இரயில் விபத்து – காரணம் இதுதான்!

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம்- பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம்- பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்!

பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் மிரட்டல்!

பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் மிரட்டல்!

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா!

புதுச்சேரியில் மீண்டும் கொரோனா!

அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை!

அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies