ஊழல் செய்வதில் நம்பர் ஒன் திமுக தான் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
Sunday, December 10 2023
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Janam Tamil
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Janam Tamil
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஊழல் செய்வதில் நம்பர் ஒன் திமுக தான் – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

மோடி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்க்க முடிகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Web Desk by Web Desk
Aug 2, 2023, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழலுக்கு எதிரான தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின், “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையின் ஆறாம் நாளான இன்று திருமயத்தில் மேற்கொண்டார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடை பயணத்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இருபுறமும் நின்ற மக்களிடம் அண்ணாமலை குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
பாஜகவைப்  பொறுத்தவரை இந்த யாத்திரை மக்களைச்  சந்திக்க ஒரு வாய்ப்பு.  நாம் சொல்லும் கருத்துக்களைச்  சாமானிய மக்களும் ஏற்றுகிறார்கள்.

இந்த 9 ஆண்டுகள் பிரதமர் மோடி மாற்றத்தைத்  தந்துள்ளார் என்றும் எண்ணுகிறார்கள். இந்த யாத்திரை மூலம்  நல்லதொரு மாற்றம் வரும் என்பது எங்களது நோக்கம். விமர்சனங்கள் வைக்க வைக்க நாம் செய்யக்கூடிய வேலை சரி என்று நமக்கு தோன்றும். யாத்திரை மக்களைச் சென்றடைகிறது, யாத்திரைக்கான நோக்கம் நிறைவேறுகிறது என்பதை எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களே  நமக்கு காட்டுகின்றன . எங்களைப் பொறுத்தவரை இருப்பதை இருப்பதாகவும், செய்ததைச் சொல்கின்றோம். நாங்கள்  பொய் சொல்வது கிடையாது.

பிரதமர் மோடி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது,  ஆட்சியில் திமுக செய்யும் குற்றங்களை ஆதாரத்துடன் தந்து வருகின்றோம். எதையும் பேச வேண்டும் என்பதற்காக பேசாமல், செய்த  வேலையை மக்களிடம் சொல்லி மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க ஆதரவு கேட்டுக் கொண்டு வருகின்றோம். இந்த யாத்திரையைப் பொறுத்த வரையில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தமிழ்நாட்டில் வெல்ல வேண்டும். இந்த யாத்திரை முடியும்போது தெரியும்.

பாஜக தனது வேலையைச் செய்கிறது அதிமுக அதிகாரப்பூர்வமாக தேசிய  ஜனநாயக கூட்டணியில்  உள்ளது, அதனால் கூட்டணி கட்சி கூட்டத்திற்கும் அழைப்புகள் விடுக்கப்பட்ட உள்ளது.  இதில் யாருக்கும் வருத்தம் கிடையாது. திமுகவின் ஊழல் முதல் பட்டியல் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வெளியிடப்பட்டது. இரண்டாவதாக வெளியிடப்பட்ட பட்டியல் நடவடிக்கைக்காக வெளியிடப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையில் கொடுக்கப்பட்ட புகார்கள் எதற்கும் நடவடிக்கை எடுக்காததால், தற்பொழுது இந்த பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளது, ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்.

இந்தியாவிலேயே இதுவரை நடந்த ஆட்சியில் சிறந்த ஆட்சியாக பிரதமர் மோடியின் ஆட்சி உள்ளது. இந்த நல்லாட்சியை யாருடனும் ஒப்பிட முடியாது. எல்லா விதத்திலும் எல்லாருக்குமான பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியாக உள்ளது. இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள். அரசியலில் சித்தாந்தத்தின் அடிப்படையில் எதிர்ப்பது வேறு, பொய்யின் அடிப்படையில் எதிர்ப்பது தவறு. 2019-ல் அதைத்தான் இங்கு செய்தார்கள். ஆனால் இம்முறை மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

தமிழ்நாட்டில் இன்று ஊழலை எதிர்த்து பேசக்கூடிய கட்சி பாஜக தான். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் தவறை சுட்டிக்காட்டுவது பாஜக தான்.
நம்மைப் பொறுத்தவரை அமித்ஷா சொன்னதை போல இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஊழல் செய்யக்கூடிய அரசாங்கமாக இருப்பது திமுக தான் அதைத்தான் மக்கள் மன்றத்தில் வைக்கின்றோம் என தெரிவித்தார்.  நான் எந்த இடத்திலும் போட்டியிடவில்லை பாதயாத்திரை முடித்துவிட்டு கட்சிப் பணியை செய்யத்தான் நேரம் இருக்கிறது என் வேலை கட்சியை வளர்ப்பது கட்சி வேலை செய்வது என்று கூறினார்.

Tags: k Annamalai Bjp
ShareTweetSendShare
Previous Post

வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமல் கர்நாடக அரசு திண்டாட்டம்!

Next Post

நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடர் – 11 மசோதாக்கள் நிறைவேற்றம்

Related News

இனிவரும் ஆட்சி பாஜக ஆட்சி!

இனிவரும் ஆட்சி பாஜக ஆட்சி!

திமுக, காங்கிரஸ் கட்சிகள் இனி வெறுப்பு அரசியல் செய்யமுடியாது! – அண்ணாமலை

திமுக, காங்கிரஸ் கட்சிகள் இனி வெறுப்பு அரசியல் செய்யமுடியாது! – அண்ணாமலை

திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது!- அண்ணாமலை குற்றசாட்டு.

திமுக ஆட்சியில் தமிழகம் ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது!- அண்ணாமலை குற்றசாட்டு.

கமலாலயத்தில் ஆயுத பூஜை!

கமலாலயத்தில் ஆயுத பூஜை!

பாஜக தலைமைக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை!

பாஜக தலைமைக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை!

சிறையில் உள்ள தீவிரவாதிகளை விடுதலை செய்யக்கூடாது – அண்ணாமலை ஆவேசம்!

சிறையில் உள்ள தீவிரவாதிகளை விடுதலை செய்யக்கூடாது – அண்ணாமலை ஆவேசம்!

Load More

அண்மைச் செய்திகள்

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

இன்றைய இராசிபலன்!

இன்றைய இராசிபலன்!

2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!

2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies